Tuesday, May 5, 2020

திருவாடானைக் கல்வெட்டு

  பாண்டியர் கால கல்வெட்டுகள்
 இத்திருக்கோயிலில் திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் பதினேழாம் ஆட்சியாண்டிலும், மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பதினாறாம் ஆட்சியாண்டிலும், பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும், சகம் 1557 இல் பொறிக்கப்பெற்ற ஒரு கல்வெட்டும், ஆண்டு குறிக்காத மற்றொரு கல்வெட்டுமாக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1914, No. 433-436. (Ramnad District, Adani Taluk)).

இவைகளுள் இறைவன்பெயர் ஆடானைநாயனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவைகள் இறைவனுக்கு நிலம் கொடுத்துள்ள செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
---------------------------------------------------------------------------------------------------
சேதுபதி கால கல்வெட்டு

இரண்டாம் சடைக்கண் சேதுபதி என்ற தளவாய் சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் கிடைத்த இரண்டாவது கல்வெட்டு இது.
இந்த மன்னரது பிரதிநிதியான திருமலையன் என்பவர். சேதுபதி மன்னருக்காக இந்தக் கல்வெட்டினை வரைந்துள்ளார்.
இது திருவாடானை திருக்கோயிலின் ராஜ கோபுரத்தின் வலப்புற மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது.
சக ஆண்டு 1557 - தை மாதம் 14ல் திருவாடானையில் எழுந்தருளியுள்ள ஆதி ரத்தினேசுவரர் சுவாமிக்கு அபிஷேகம், திருநீறு. மாலைகள், தணிகை, பிரசாதம் ஆகியவைகளுக்காக கிராமம்தோறும் ஒரு பணமும், ஒரு காசும், ஒரு கல நெல்லும் குடிமக்கள் கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிட்ட அறிவிப்பினை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த அறிவிப்பினுக்கு மாற்றமாக சுவாமிக்கு உரியமேலே கண்ட பணத்தையும், நெல்லையும் கொடுக்காமலும், அவைகளைத் தானே அனுபவித்துக் கொண்டவன் கெங்கைக் கரையிலே காராம் பசுவையும் மாதா, பிதாவையும், குருவையும் கொன்ற பாவத்திலேபோகக் கடவான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் சுவாமிக்குச் செலுத்தவேண்டிய நெல் முதலியவைகளைக் கொடுக்காமல் இருப்பதை அனுமதித்து அதற்காகக் கைக்கூலி பெற்றவனை இந்தக் கல்வெட்டில் மிகவும் கடுமையாகவும், கீழான சொற்களினாலும் குறிக்கப் பெற்றுள்ளது.இந்த சொல் இன்றளவும் இந்தப் பகுதியில் வாக்கில் இருந்து வருகிறது. மேலும் இத்தகைய இழிய செயலைச் செய்தவன் தனது வீட்டுப் பெண்களைத் தவறான பாவ காரியங்களில் ஈடுபடுத்தியவனாகக் கடவன் எனக் கடுமையான முறையில் இந்த ஒம்படைக்கிளவியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக கல்வெட்டின் இறுதிப்பகுதி அழிந்து படிக்க முடியாத அளவு சிதைவு அடைந்துள்ளது. அந்தக் காலத்தில் பசுவை வதைப்பதும், பெற்ற தாய் தந்தையையும், கற்றுக் கொடுத்த குருவையும் கொல்வதும் மிகப் பெரிய பாவமாகக் கருதப்பட்டது என்பதும் தெரியவருகிறது. இந்தக் கல்வெட்டின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கைக்கூலி என்ற சொல் இந்தப் பகுதியின் வட்டார வழக்கு கைக்கூலி என்பது கையூட்டு, அல்லது லஞ்சம் என்பதை குறிப்பதாகும். மேலும் இந்தக்கல்வெட்டில் திருவாடானை திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர் ஆடானை நாயகர் என நல்ல தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் ஆடும், யானையும், இறைவனை வழிபட்டு முக்தி அடைந்த காரணத்தினால் இந்தக்கோயில் இறைவருக்கு ஆடானை நாயகர் என்ற பெயர் ஏற்பட்டு இருப்பது என தலபுராணம் விளக்குகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், இந்த இறைவரைத் தேவாரம் பாடிச் சிறப்பித்துள்ளனர். அவர்களது பதிகங்களில் இந்தக் கோவிலின் இறைவர் ஆடானை நாயகர் என்றே பாடியுள்ளனர். ஆனால் தற்பொழுது இந்த இறைவன், இறைவியின் பெயர் ஆதி ரத்தினேசுவரர் என்றும், அம்பிகை சிநேகவள்ளி என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இது 17, 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்பகுதி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய நாயக்க மன்னர்களது தெலுங்கு மொழியின் தாக்கம் ஆகும். இந்தக் கல்வெட்டின் ஆங்கில ஆண்டு கி.பி.1635 ஆகும். இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.'

"ஸ்வஸ்தியூரீ சகாத்த In 1557 இதன் மேல் செல்லாநின் ற யுவ u தை மீ 14ல் பூறுவ பட்சத்தில் பெளறுணையும் ஆ ச நட்சத்திரமும் பெற்ற புண்ணிய கா லத்தில் சுவாமி ஆ டானை நாயகற்கு சேதுபதித் தேவர் . புண்ணியமாகத் திருமலையன் கட் டளை யிட்டபடி யின்நாயநார் கோ வில் தீதந் திறுநீறு சாத்துப் படி திரு மாலை அருளிப்பா டு தழுகைப் நேச தமும் பெ. காக கோவில் _ க்களில்  கல நெல்லும் உள்ப ட சுவாமிக்கு.முத லிடாமல் எடுத்தவன் கெங்கைக் கரையி லே காராம் பசுவை  யும் மாதா பிதாவை யும் குருவையும் கொன்ற தோஷ த்திலே போகக் கடவாராகவும் இந்தக் கிராமங்களி லே கைகூலி வாங் கியவன் பெண்டாட்டி யையும் உடன் பிறந்தாள் மகளையும் மருமக ளையும் கயவர்களையும் ஒரு விட்டிலே சத்து ரு வுடனே கூட்டிக் குடு த்து சம்போகம் பண்ணி சேதுபதி மன்னர்

No comments:

Post a Comment

திருவாடானை கும்மி, தலபுராணம்.

திருவாடானை தல புராணம், வாருணி கும்மி  மேலுள்ள தலைப்புச்  சுட்டியைச் சுட்டி இவற்றைப் பெறலாம்